ஜோதிட கேள்வி பதில்கள்
கடன் இரும்பு வியாபாரம் செய்து வந்த என் தம்பிக்கு கடன்தொகை அதிகமாகிவிட்டது. வீட்டை விட்டு சென்று விட்டார். வீட்டில் மிகுந்த மனஉளைச்சலோடு இருக்கிறோம். எப்போது வீடு திரும்புவார்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? வீடு நல்ல விலைக்கு விற்குமா? கடன்கள் எப்போது தீரும்? - வாசகர், புதுச்சேரி
உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்.
உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. தர்மகர்மாதிபதியான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அவரின் கடன் பிரச்னைகள் முழுமையாகத் தீர இன்னும் இரண்டாண்டுகள் ஆகும். அதுவரை பொறுமையாக இருந்து பொறுப்புடன் தொழிலை செய்து வரச்சொல்லவும். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும்.