உங்கள் மனைவிக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அதோடு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியின் தசையில் சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு மன அமைதி திரும்பும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.