ஜோதிட கேள்வி பதில்கள்
பி.இ., படித்துள்ள எனது இரண்டாவது மகன் எம். எஸ்., படிக்க வெளிநாடு செல்ல விரும்புகிறார். எப்போது வெளிநாடு செல்வார்? எப்போது திருமணம் நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், பொன்னேரி.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகருடன் குருபகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி. கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகருடன் குருபகவானும் இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு உள்நாட்டிலேயே வேலை நல்ல சம்பளத்துடன் இந்த ஆண்டுக்குள் கிடைத்து விடும். கம்பெனி மூலமாகவே வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மற்றபடி குடும்பத்துடன் இணக்கமாக இருப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும்.