உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. நீங்கள் செய்துவரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியை எட்டிவிடுவீர்கள். ஊர் மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். ஆரோக்கிய ஸ்தானாதிபதி லக்னாதிபதியாகி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் பெரிய குறைபாடு என்று எதுவும் ஏற்படாது. பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.