ஜோதிட கேள்வி பதில்கள்
மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் என் மகளுக்கு ராகு- கேது தோஷம் உள்ளதால் திருமணம் தாமதமாகிறது என்று கூறுகிறார்கள். பரிகாரமும் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? - வாசகர், சேலம்
உங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதிகள் குடும்ப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் குருமங்கள யோகம் பூர்வபுண்ணிய
உங்கள் மகளுக்கு மகர லக்னம், கடக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதிகள் குடும்ப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் குருமங்கள யோகம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உண்டாவதும் சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உள்ளது. பிரதி புதன் கிழமைகளில் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.