உங்கள் மகனுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் வீட்டிற்கு குடும்ப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தெற்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பெயிண்ட், ஹார்டுவேர், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.