உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. சந்திரபகவான் குருபகவானுடன் சுக ஸ்தானத்தில் இணைந்து குருசந்திர யோகத்தைப் பெறுகிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சந்திரபகவானின் தசையில் நலம் கூடத்தொடங்கும். சனிபகவான் தர்மகர்மாதிபதியாகி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் கண்டக சனி, அஷ்டம சனியில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.