உங்கள் சகோதரி மகளுக்கு மீன லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவானும் தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுப்பது சிறப்பு. குருபகவானின் பார்வை களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களின் மீது படிகிறது. அவருக்கு தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சூரியபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. தொடர்வதும் களத்திர ஸ்தானாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசையாகவும் இருப்பதால் தொடர்ந்து நன்மைகள் உண்டாகும். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவர் வசிக்கும் நாட்டிலேயே வேலைப் பார்க்கும் உங்கள் குலத்திலேயே உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிதுர்தோஷம் இல்லை. பெற்றோருக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.