உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், கடக ராசி. இருவருக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் காலம் சரியாக அமையவில்லை. அதற்குப்பிறகு இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மறுபடியும் சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும். தொடரும் சனிமஹா தசையில் வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் கைகூடிவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.