என் வாழ்க்கையில் துன்பப் படாத நாள்களே இல்லை. மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தும் நிரந்தமாக எந்த வருமானமும் இல்லை. ராகு தசை நடக்கிறது. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பூர்வீகச் சொத்து எப்போது கிடைக்கும்? எப்போது நல்ல காலம் பிறக்கும்? - வாசகர், கும்பகோணம் 

உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி ராகுபகவானுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி ராகுபகவானுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் குருபகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, ராகு பகவான்களின் மீதும் படிவதும் சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பொருளாதார நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி இரண்டும் மேன்மையடைந்து விடும். மற்றபடி உங்களுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். புத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் குழந்தைகளும் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். இந்த காலகட்டத்தில் பூர்வீகச் சொத்தும் கைவந்து சேரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com