உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், துலாம் ராசி, லக்னாதிபதி தனாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் சூரியபகவானின் வீடான சிம்ம ராசியில் அமர்ந்திருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும். அதோடு செவ்வாய்பகவான், குருபகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பாகும். இதனாலும் செவ்வாய்தோஷம் அடிபட்டுப்போகிறது. அவருக்கு படித்த நல்ல வேலையிலுள்ள பெண் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைந்து திருமணம் கைகூடும். வெளியூரில் பதவி உயர்வு கிடைக்கும். இன்னும் 3 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடுகட்டும் யோகங்கள் உண்டாகும்.