உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சேர்ந்து வாழ வாய்ப்புண்டாகும். உங்கள் மகனுக்கு தற்சமயம் குடும்ப லாபாதிபதியின் தசையில் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் உத்தியோகத்தில் நல்ல நிலையை எட்டிவிடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.