உங்களுக்கு சிம்ம லக்னம், மகர ராசி. தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதி செவ்வாய்பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் அயன ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி, ஆறாம் அதிபதி சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு மறுபடியும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.