உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுகாதிபதியைப் பார்வை செய்கிறார். இதனால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பாக்கியாதிபதி உச்சம் பெற்று சந்திரபகவானைப் பார்வை செய்வதால் குருசந்திர யோகம் உண்டாகிறது. மேலும் குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் படிகிறது. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.