உங்கள் பேரனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் கன்னி ராசியில் ஆட்சி, உச்சம் , மூலதிரிகோணம் பெற்று பூர்வபுண்ணியம், அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். குருபகவானும் அயன ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் ஆறாம் வீட்டையும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் திக்பலம் பெற்று லக்னத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் அவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்ன சுபரான ராகுபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. ராகுபகவான் சனிபகவானைப் போன்று பலன் தருவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவருக்கு நிரந்தர நல்ல வேலை மற்றும் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.