உங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் குடும்பாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. ஆறாமதிபதியான குருபகவான் பாக்கியாதிபதியுமாகி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் ஆரோக்கியம் சீர்பட்டு விடும். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிறையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.