எனது இளைய மகனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எல்லா பரிகாரங்களும் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? திருமணம் விரைவில் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, சென்னை

உங்கள் மகனுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குடும்பாதிபதியால் பார்க்கப்படுகிறார்.

உங்கள் மகனுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குடும்பாதிபதியால் பார்க்கப்படுகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுகிறார். குருபகவானின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் லக்னத்தின் மீதும் படிவதும் சிறப்பாகும். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று சச மகாயோகத்தைப் பெறுகிறார். களத்திர காரகரும் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் தைரிய, அயன ஸ்தானாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் வளமாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com