உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். இவர்களுடன் சூரிய, ராகுபகவான்களும் இணைந்திருக்கிறார்கள். சுக, களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சம தோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். அந்நியத்திலிருந்து பெண் அமையும். வெளிநாடு சென்று தங்கி பொருளீட்டும் யோகமும் உள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.