எனது மகளுக்கு 31 வயதாகிறது. வரன் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. எப்போது திருமணம் கைகூடும்? எதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், மறைமலை நகர்

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தைக் கொடுக்கிறார்.

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி ஆறாம் வீட்டில் மறைவு பெற்று களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானத்தில் சுகாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதி ஆகியோர் இணைந்திருக்கிறார். தற்சமயம் அஷ்டம லாபாதிபதியான குருபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com