என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணம் அமைய பரிகாரங்களும் செய்துள்ளோம். எத்தகைய பெண் எத்திசையிலிருந்து அமைவார்? - வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவானும் பூர்வபுண்ணியம் மற்றும் அயன ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவானும்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவானும் பூர்வபுண்ணியம் மற்றும் அயன ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவானும் அஷ்டம ஸ்தானத்தில் சிறப்பாக இணைந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். சுக ஸ்தானத்தில் சனி, செவ்வாய்பகவான்கள் இருப்பது குறையென்றாலும் செவ்வாய் தோஷம் இல்லை. களத்திர, நட்பு ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com