என் வயது 18. நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறேன். அரசு வேலை கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசு வேலை கிடைக்குமா? எந்த வயதில் வேலை கிடைக்கும்? எப்போது வீடு கட்டுவேன்? - வாசகி, நாகப்பட்டினம்

உங்களுக்கு ரிஷப லக்னம் என்று வருகிறது. மேஷ லக்னம் அல்ல. தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திர, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார்

உங்களுக்கு ரிஷப லக்னம் என்று வருகிறது. மேஷ லக்னம் அல்ல. தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திர, கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். லக்னத்தில் தர்மகர்மாதிபதியான சனிபகவான் லாபாதிபதியான குருபகவானுடன் இணைந்து இருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை செவ்வாய்பகவானின் மீது படிவதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. குருபகவானின் ஏழாம் பார்வை களத்திர, நட்பு ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியபகவானின் மீதும் படிகிறது. இதனால் சிவராஜயோகம் உண்டாகிறது. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைத்துவிடும். 2023- ஆம் ஆண்டுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். நல்லபடியாக பட்டப்படிப்பை முடித்துவிடுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com