எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? உத்தியோகம் தொழில் எவ்வாறு அமையும்? தூக்கமின்மை, தோல் அரிப்பு (அலர்ஜி) உள்ளது. எப்போது சரியாகும்? - வாசகர், திருவண்ணாமலை
By DIN | Published On : 23rd August 2019 10:57 AM | Last Updated : 23rd August 2019 10:57 AM | அ+அ அ- |

உங்களுக்கு ரிஷப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதி அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். குருபகவான் உச்சம் பெற்று களத்திரம், பாக்கியம், லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சுகாதிபதியின் தசை நடப்பதால் இந்த ஆண்டே திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. இதனால் செய்தொழில் சிறப்பாக நடைபெறும். மற்றபடி உங்கள் சிறிய உடலுபாதைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு குணமடைந்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.