எனது மகள் பி.சி.ஏ., படிக்கிறார். அவரது ஜாதகம் சுத்தமானதா? மேற்படிப்பு தொடர வாய்ப்பு உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? புத்திரபாக்கியம் உண்டா? அரசுப் பணி கிடைக்குமா?- வாசகி, திருப்பத்தூர்

உங்கள் மகளுக்கு கடக லக்னம் என்று வருகிறது. மிதுன லக்னம் அல்ல. மற்றபடி சதய நட்சத்திரம் நான்காம் பாதம் என்பது சரியானது

உங்கள் மகளுக்கு கடக லக்னம் என்று வருகிறது. மிதுன லக்னம் அல்ல. மற்றபடி சதய நட்சத்திரம் நான்காம் பாதம் என்பது சரியானது. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அவர்களுடன் கேதுபகவான் இணைந்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதி ஆகிய மூன்று திரிகோணாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள் என்று கூறவேண்டும். சர்ப்ப தோஷம் இருந்தாலும் குருபகவானின் சஞ்சாரத்தால் தோஷம் குறைகிறது. மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளிலும் வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். புத்திரபாக்கியத்திற்குக் குறை இல்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com