எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்குமா? - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி லாபாதிபதியுடன் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. லக்னாதிபதி லாபாதிபதியுடன் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். சுகாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். தொழில் ஸ்தானாதிபதியும் அயன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து குருபகவானின் பார்வையை பெறுகிறார். இதனால் சிவராஜயோகம் உண்டாகிறது. மேலும் குருபகவானின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் படிகிறது. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் ராகுபகவானின் தசையில் புதன் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிரந்தர வேலையும் திருமணமும் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com