என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். குருபகவானின் பார்வை தைரிய ஸ்தானம், பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய்பகவானின் மீது படிகிறது. அவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com