என் மகன் எம்.இ., படித்துள்ளார். அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எத்திசையில் பெண் அமையும்? வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளதா? - வாசகர், திருவண்ணாமலை

ங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார்

உங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். குருபகவானும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தையும் தைரிய ஸ்தானத்தையும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். சந்திர மங்கள யோகம், கஜகேசரி யோகம். குருமங்கள யோகம், புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் கைகூடும். இந்த காலகட்டத்தில் தெற்கு திசையிலிருந்து படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com