என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவெறும்பூர்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி, புத, சனி பகவான்களுடன் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுகாதிபதியான சந்திரபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com