என் மகனுக்கும் மகளுக்கும் எப்போது திருமணம் நடைபெறும்? இருவருக்கும் சொந்தத்தில் திருமணம் அமையுமா? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? - வாசகர், திருப்பரங்குன்றம்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லாபாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் லக்னத்திலிருந்து பார்வை செய்வது சிறப்பாகும். அவருக்கு தற்சமயம் குருமகா தசையில் பிற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் வடக்கு, வடமேற்கு திசையிலிருந்து அந்நிய சம்பந்தத்தில் அமைந்து திருமணம் கைகூடும். உத்தியோகம் பார்க்கும் பெண் அமையும். உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானத்தில் லக்னாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதி ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களோடு சுகாதிபதியான சூரியபகவானும் இணைந்திருப்பது பாக்கிய ஸ்தானத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது. சர்ப்ப தோஷம் உள்ளது. இவருக்கும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். வரன் தெற்கு திசையிலிருந்து அமைவார். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். உங்கள் குடும்ப மேன்மைக்காக பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com