எனக்கு 56 வயதாகிறது. என் மனைவி 17 ஆண்டுகளுக்கு முன்பு அசாதாரண மரணம் அடைந்தார். என் மகன் 2 வயதில் நோய் வந்து இறந்தான். என் மகள் திருமணமாகி கணவருடன் வசிக்கிறாள். என் தாய் எங்கள் தந்தையின் சொத்து கிடைக்க வேண்டி வழக்கு தொடுத்துள்ளார். ஒரு ஜோதிடர் நவாம்சத்தில் புதன் நீச்சமாகி போய் விட்டதால் லக்னாதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகம் ஏற்படாது என்று கூறினார். என் வாழ்க்கை எவ்வாறு அமையும். நான் என்ன தொழில் செய்யலாம்? கூட்டு சேரலாமா? என் தாய்க்கு சொத்து கிடைக்குமா? என் மற்ற ஆசைகள் பூர்த்தியடையுமா? என் ஆயுள் பற

உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமானஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம்

உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமானஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுப கிரகமாகி பத்தாம் வீடான கேந்திர ராசிக்கு அதிபதியாவதால் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பெறுவார். அவர் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுகிறார். பத்தாம் வீட்டோன் பலம் பெற்றிருந்தால் தைரியமாக சுய தொழில் செய்யலாம். நஷ்டம் ஏற்படாது. 

சந்திரபகவான் பலம் பெற்றிருப்பதால் திரவப்பொருள்கள், வெண்மை நிறப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடலாம். கலைத்துறையும் ஏற்றது. அதேநேரம் சந்திரபகவானுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமல் இருப்பது குறையாகும். இதற்கு கேமத்துருமயோகம் என்று பெயர். லக்னத்திற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானின்  சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். ராசியில் உச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருப்பது சிறு குறையே. மற்றபடி புதபகவானால் சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. புதபகவான் நவாம்சத்தில் நீச்சம் பெறுவதால் அவர் முழு பலம் பெறாததால் சுக்கிரபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் கிடைக்காது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் புதபகவானின் தசை, புக்தி, அந்தரங்களில் சில இடையூறுகளும் பிரச்னைகளும் காரிய தாமதமும் ஏற்படக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் பகை வீடான சிம்ம ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான தனுசு ராசியை அடைகிறார். தைரிய, முயற்சி, வைராக்கிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டிலேயே புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 

குருபகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களின் மீதும் ஒன்பதாம் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கதிபதியான சூரியபகவான் பதினொன்றாம் வீட்டிலேயே சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் தன் நட்பு ராசியான விருச்சிக ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 

பொதுவாக, பத்தாம் வீட்டை வைத்து ஜீவனம் , கூட்டுத்தொழில் இவற்றை நிர்ணயம் செய்ய வேண்டும். உங்களுக்கு பத்தாமதிபதியாகிய சந்திரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் வலுவாக இருந்தாலும், ராகுபகவானுடன் இணைந்திருப்பதால் அவ்வப்போது சிறிய ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். மற்றபடி செய்தொழிலில் பெரிய அளவுக்கு பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. மற்றபடி தனித்தே தொழில் செய்ய வேண்டும். மேலும் வியாபாரத்திற்கு காரகத்துவம் பெற்றுள்ள புதபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவர் பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருப்பது குறையல்ல. அதோடு அவரை குருபகவானும் பார்வை செய்வதால் சமயோஜித புத்தியும் செயல்படும். சந்திரபகவானின் ஆதிபத்யத்துடன் புத, சுக்கிர பகவானின் ஆதிபத்யம் பெற்றுள்ள தொழில்களிலும் நீங்கள் ஈடுபடலாம். அதாவது, அச்சு, புத்தகம், எழுத்து, பத்திரிகை மற்றும் நகைத் தொழில், சிமெண்ட், பெயிண்ட், இரும்பு, கம்பி, பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகம், மருத்துக் கடை ஆகிய தொழில்களிலும் ஈடுபடலாம்.

பூர்வீகச் சொத்தைக் குறிப்பது பாக்கிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானாதிபதியும் மற்றும் பித்ருகாரகரான சூரியபகவானுமாவார்கள். உங்கள் அன்னை தன் கணவரின் சொத்துக்காக தொடங்கப்பட்டுள்ள வழக்கைப் பற்றி கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் தாய்காரகரான சந்திரபகவானும் ராகுபகவானும் இணைந்திருக்கிறார்கள். ராகுபகவான் பிதாமஹர் (தந்தையின் தந்தை) என்பார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி புதபகவான் அயன ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். வாழ்க்கையை அனுபவிக்க லக்னாதிபதியின் பலம் அவசியம் என்று பலமுறை எழுதியுள்ளோம். 

உங்களுக்கு லக்னாதிபதி முழுமையான நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். தாய் ஸ்தானமான நான்காம் வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். தந்தைகாரகரான சூரியபகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். சர லக்னங்களுக்கு லாப ஸ்தானம் பாதக ஸ்தானமாக அமையும் என்பது ஜோதிட விதி. பாதகாதிபதி, லாப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. இதனால் பாதகாதிபத்யம் வேலை செய்யாது. உங்களுக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி ஒன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் அன்னை தொடுத்துள்ள வழக்கில் வெற்றி பெறுவார். 

பொதுவாக, சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி சிறப்பாக வேலை செய்யும். அதாவது மேற்கூறிய காலகட்டத்திற்குப்பிறகு பத்தாண்டுகள் நீங்கள் செய்துவரும் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். சந்திரபகவான் மனோகாரகராகி சுப பலம் பெற்றிருப்பதால் உங்கள் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிடும். சனிபகவானும் லக்னாதிபதியும் வலுத்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com