எனது மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? புத்திர பாக்கியம் இருக்குமா? எந்த திசையிலிருந்து மாப்பிள்ளை அமைவார்? விசாக நட்சத்திர வரன் பொருந்துமா? - வாசகி, திருப்பத்தூர்

உங்கள் மகளுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும், அயன

உங்கள் மகளுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும், அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத ஆதித்யர்களையும், குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜ யோகம், புதஆதித்ய யோகம் ஆகியவை உண்டாகிறது. பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து லாப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் உச்சம் பெற்ற தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானையும், ஆட்சி பெற்றுள்ள சனிபகவானையும் சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். சந்திரகேந்திரத்தில் செவ்வாய், சனிபகவான்கள் உச்சம், ஆட்சி பெற்றிருப்பதால் ருசக யோகம் மற்றும் சசமஹா யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் சுக்கிர மகாதசையில் சந்திர புக்தி நடக்கிறது. இது இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் தென்கிழக்கு தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பொதுவாக, நட்சத்திரப் பொருத்தம் என்பது ஓர் அடித்தளமே அன்றி அதுவே முழுமையாகாது. அதனால் ஜாதகப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும். மற்றபடி எதிர்காலம், மணவாழ்க்கை, புத்திரபாக்கியம் சீராக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com