எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண், எத் திசையில் அமைவார்? 12-இல் செவ்வாய், தோஷமா? வேலையில் இடம் மாற்றம் ஏற்படுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப, லாபாதிபதி மற்றும் கேது பகவான் ஆகியோர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப, லாபாதிபதி மற்றும் கேது பகவான் ஆகியோர் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பத்தாம் வீட்டில் சூரியபகவான் திக்பலம் பெறுவது சிறப்பாகும். பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டையும். எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, சுக்கிர பகவான்களையும் பத்தாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, கேதுபகவான்களையும் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி சனிபகவான் களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி, மூலதிரிகோணம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகங்களிலொன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். தற்சமயம் கேது மகா தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் தெற்கு தென் கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். செவ்வாய் தோஷம் இல்லை. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு வேறு நல்ல வேலைக்கு மாறுவார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com