எனது மகளுக்கு (வளர்ப்பு மகள்) 5 வயதாகிறது. இன்னும் எழுந்து நடக்கவில்லை. நன்றாக பேசுகிறாள். எப்போது நடப்பாள்? படிப்பில் அதிக கவனம் இல்லை. அவளது கல்வி, வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? - வாசகி, திருத்துறைப்பூண்டி

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானைப் பார்வை

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானைப் பார்வை செய்வதால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பாக்கியாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சூரிய, ராகு பகவான்களைப் பார்வை செய்கிறார். சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சனி பகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் குருமகா தசை நடப்பதால் உடலுபாதைகளிலிருந்து விடுபட்டு விடுவார். கல்வி, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com