என் மகளுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை புத்திரபாக்கியம் கிட்டவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். புத்திரபாக்கியம் உண்டா? எப்போது கிடைக்கும்? - வாசகர், வில்லிவாக்கம்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று ருசக யோகத்தைப் பெறுகிறார்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று ருசக யோகத்தைப் பெறுகிறார். புத்திர ஸ்தானாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்திலிருந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் ஒன்பதாம் பார்வையை பெறும் களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. உங்கள் மருமகனுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி. லக்னாதிபதியும் களத்திர ஸ்தானாதிபதியும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார்கள். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் சுயபுக்தி முடிந்து பாக்கியாதிபதியான புதபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அவர்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com