என் மகன் தற்போது அரசுப் பணிக்கு உறுதியாக முயற்சி செய்கிறார். இன்னும் எந்த வேலையும் அமையவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், ராமநாதபுரம்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதிகள் களத்திர, நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதிகள் களத்திர, நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். குருபகவான் தன ஸ்தானத்தில் மூலதிரிகோணம் பெற்று ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் எட்டாம் வீட்டையும் தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சந்திரபகவானின் தசை நடப்பதால் அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதாலும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு வேலை கிடைக்கும். 27 -ஆம் வயதில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com