சைவ சித்தாந்தம் அறிவோம்

சிவனை குறிப்பது சைவ சித்தாந்தமாம்
சைவ சித்தாந்தம் அறிவோம்

சிவனை குறிப்பது சைவ சித்தாந்தமாம்
சைவ சித்தாந்தம் முப்பொருளைக் கொண்டதாம்!
பதி, பசு, பாசம் என்பன அவையே,
பதி என்பது இறையே
பசு என்பது உயிர்களே
பாசம் என்பது தளையாம்!
தளையும் மூன்றாம்;
ஆணவம், கன்மம், மாயை அவையாம்
ஆணவம் அறிவை மயக்குமாம்
கன்மம் “நான்’ என்ற செயல் வினையாம்
மாயை உலகப் பொருளை பற்றி நிற்குமாம்
மாயை சுத்த மாயை, அசுத்த மாயை என்பனவாம்.

சுத்த மாயை ஆணவத்தோடு கலவாததாம்;
அசுத்த மாயை ஆணவத்தோடு கலவியதாம்! 
பிரகிருதி மாயை அசுத்த மாயையிலிருந்து தோன்றிய காரியமாம்
பிரகிருதி மாயை சாத்துவீகம், ராசதம், தாமதம் முக்குணங்களாம்
பிரகிருதி மாயை தோன்றும் ஆன்ம தத்துவங்கள் இருபத்திநான்காம்;
செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என ஞானேந்திரியங்கள் ஐந்தாம்
வாய், கால், கை, எருவாய், கருவாய் என கன்மேந்திரியங்கள் ஐந்தாம்
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என தன் மாத்திரைகள் ஐந்தாம்
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என பூதங்கள் ஐந்தாம்!
மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என அந்தக்கரணங்கள் நான்காம்;

வித்தியா தத்துவங்கள் ஏழாம் மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் அவையேயாம்.
அசுத்த மாயை தத்துவமும் அவையேயாம்
சுத்த தத்துவம் ஐந்தாம்
சிவம், சக்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை அதுவேயாம்!
சைவசித்தாந்த தத்துவங்கள் முப்பத்தாறினையும் அறிந்திடுவோம்
சிவன் தாள் வணங்கி அவனருளால் முக்தி பெற்றிடுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com