உத்யோகத்தில் நல்ல நிலையை அடைவார்!

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? உத்யோகத்தில் பதவி உயர்வு எப்பொழுது கிடைக்கும்? 


என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? உத்யோகத்தில் பதவி உயர்வு எப்பொழுது கிடைக்கும்? 

பத்மநாபன், அயப்பாக்கம்.

உங்கள் மகளுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், குடும்பாதிபதியான சனி பகவான் குடும்பஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று அஷ்டம ஸ்தானத்திலுள்ள செவ்வாய் பகவானைப் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திலேயே மூலத் திரிகோணம் பெற்று சந்திர, ராகு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். 

பாக்கியாதிபதி புத பகவான் லாப ஸ்தானத்தில் சூரிய, குரு பகவான்களுடன் இணைந்திருக்கிறார். இவர்கள் மூவரின் பார்வையும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது படிகிறது. தொழில் ஸ்தானமும், லாப ஸ்தானமும் வலுத்திருப்பதால் உத்யோகத்தில் நல்ல நிலையை எட்டி விடுவார். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. 

களத்திர ஸ்தானாதிபதியான சந்திர பகவான் லக்ன சுபர்களுடன் இணைந்திருப்பதாலும், தற்சமயம் குரு மஹா தசையில் கேது பகவானின் புக்தி நடக்க இருப்பதாலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com