கோடீஸ்வர யோகம்!

என் கணவர் தற்பொழுது உள்ள வேலையில் பல பிரச்னைகள், தடங்கல்கள் உள்ளன. இந்த வேலையைத் தொடரலாமா அல்லது வேறு வேலை தேடினால் கிடைக்குமா? கடன்கள் எப்பொழுது தீரும்?


என் கணவர் தற்பொழுது உள்ள வேலையில் பல பிரச்னைகள், தடங்கல்கள் உள்ளன. இந்த வேலையைத் தொடரலாமா அல்லது வேறு வேலை தேடினால் கிடைக்குமா? கடன்கள் எப்பொழுது தீரும்? சொந்தமாகத் தொழில் செய்யலாமா? எந்த மாதிரி தொழில் செய்யலாம்? மனைவி, மகள் எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது? 

வாசகி, ஆரணி.

உங்கள் கணவருக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி புத பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் நீச்சம் பெற்று, அங்கு உச்சமடைந்துள்ள பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் (பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகம்) இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜ யோகத்தைப் பெறுகிறார். 

அதோடு தொழில் ஸ்தானத்தில் தைரிய ஸ்தானாதிபதி சூரிய பகவான் திக் பலம் பெற்றமர்ந்திருக்கிறார். இதனால் சிறப்பான புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. 

அஷ்டமாதிபதி, பாக்கியாதிபதியான சனி பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 

தனம், வாக்கு, குடும்பாதிபதியான சந்திரபகவானும் பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் உச்சம் பெறுகிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் கேது பகவானுடன் (கோடீஸ்வர யோகம்) அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர (மனைவியை குறிக்கும் வீடு) நட்பு ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். குரு பகவான் கேது பகவானுடன் இணைந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. 

தற்சமயம், குரு மஹா தசையில் பரஸ்பரம் விரோதம் பெற்ற சுக்கிர பகவானின் புக்தி நடக்கிறது. தொடரும் குரு பகவானின் தசையில் பிற்பகுதியிலிருந்து மறுபடியும் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். கடன் பிரச்னை குறைந்து மகிழ்ச்சி நிறையத் தொடங்கும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு வேலையில் இருந்த பிரச்னைகள், தடங்கல்கள் மறைந்துவிடும். தற்சமயம் இருக்கும் வேலையிலேயே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொடர வேண்டும். அதற்குப் பிறகு வேறு வேலைக்கு மாறலாம். தற்சமயம் சொந்தத் தொழில் வேண்டாம். 

உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com