நான் மெக்கானிகல் தொழில் செய்து வருகிறேன். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்கிறேன். வேறு தொழில் செய்யலாமா? வீடு கட்டி காலியாக இருக்கிறது. பரிகாரம் என்ன செய்யலாம்? - வாசகர், கடலூர்

உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம், லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் அமர்ந்து மூன்றாம் வீட்டையும்


உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம், லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் அமர்ந்து மூன்றாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் ஏழாம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, புத, சந்திர, சனி பகவான்களையும் ஒன்பதாம் பார்வையாக ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். சிவராஜ யோகம், கஜகேசரி யோகம், நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. செவ்வாய், சுக்கிர பகவான்கள் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம், குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் ராகு பகவானின் தசை நடக்கிறது. நீங்கள் செய்து வரும் தொழில்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேறு தொழில்கள் எதுவும் செய்ய வேண்டாம். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com