எதிர்காலம் சிறப்பாக அமையும்

என் மகன் பட்டய கணக்காளர் படிப்பில் இன்டர் முடித்துவிட்டார். இறுதித் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறார். எப்பொழுது தேர்வு எழுதி முடித்து நல்ல வேலையில் அமர்வார்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?


என் மகன் பட்டய கணக்காளர் படிப்பில் இன்டர் முடித்துவிட்டார். இறுதித் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறார். எப்பொழுது தேர்வு எழுதி முடித்து நல்ல வேலையில் அமர்வார்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

வாசகர்...

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் பகவான் கல்வி ஸ்தானமான நான்காம் வீட்டில், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சச மஹா யோகத்தைக் கொடுக்கும் சனிபகவானுடனும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானுடனும் (கல்வி காரகர்) இணைந்திருக்கிறார். செவ்வாய் பகவானும், சனி பகவானும் நவாம்சத்தில் முறையே உச்சம் ஆட்சி பெற்றிருக்கிறார்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய், சனி, புத பகவான்களையும், ஏழாம் பார்வையாக ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டையும் ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதிகளான சந்திர, சூரிய பகவான்கள் (தர்ம கர்மாதிபதி யோகம்), உச்சம் பெற்றுள்ள களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். லக்னத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானத்தில் கேது பகவானும் அமர்ந்து சர்ப்ப தோஷம் உண்டாகிறது. தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி நடக்கிறது. சுக்கிர பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பட்டய கணக்காளராகிவிடுவார். உடனடியாக நல்ல வேலை கிடைத்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக் கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com