வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்

என் மகன் வடபழனியில் காபி கடை வைத்துள்ளார். இந்தத் தொழிலுடன் மளிகைப்பொருள்கள் விநியோகம் செய்யும் தொழிலையும் செய்ய உள்ளார். எதிர்காலம் எவ்வாறு அமையும்? 


என் மகன் வடபழனியில் காபி கடை வைத்துள்ளார். இந்தத் தொழிலுடன் மளிகைப்பொருள்கள் விநியோகம் செய்யும் தொழிலையும் செய்ய உள்ளார். எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

வாசகர், சிவகங்கை. 

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்தில் பாக்கியாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்று களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானுடனும், கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். லக்னம் மற்றும் ருணம் ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தனம், வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானுடன் (குரு மங்கள யோகம்) இணைந்து இருக்கிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று அங்கு நீச்சம் பெற்றமர்ந்திருக்கும் சூரிய பகவானுடனும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானுடனும் இணைந்திருக்கிறார். 

தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருக்கும் சனி பகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்ச பங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் முற்பகுதி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் தன் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். சிறப்பான வளர்ச்சி உண்டாகும். தொடர்வதும் லக்னாதிபதியின் தசையாக அமைவதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com