திருமணம் எப்போது நடைபெறும்?

உங்கள் சகோதரி பேத்திக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.

பெருமாள்- தாயாரை வழிபடவும்

என் சகோதரியின் பேத்தி இந்த ஆண்டு +2 படிக்கிறாா். அடுத்த ஆண்டு கல்லூரி படிப்பைத் தொடங்கலாமா? திருமணம் எப்போது நடைபெறும்?

- வாசகா், சென்னை

உங்கள் சகோதரி பேத்திக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பூா்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் மற்றும் ராகுபகவான்களுடம் இணைந்திருக்கிறாா். தொழில் ஸ்தானத்தில் சூரிய, செவ்வாய் பகவான்கள் திக்பலம் பெற்று சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர ஸ்தானாதிபதியான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவானுடன் இணைந்து இருக்கிறாா். தொழில் ஸ்தானத்தில் சிவராஜயோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமா்ந்திருக்கிறாா். தற்சமயம் கேதுபகவானின் தசையில் முற்பகுதி நடப்பதால் பட்டப்படிப்பை சிறப்பாக முடித்து விடுவாா். படித்து முடித்தவுடன் தகுதியான வேலையும் கிடைத்துவிடும். இருபத்திரண்டு வயதுக்குமேல் திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com