நான்கு சிறப்பான யோகங்கள்!

என் மகன் கேட்டரிங் படிப்பு படித்துவிட்டு சிறிய சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். எப்பொழுது அவருக்கு திருமணம் நடக்கும்? நல்ல வேலை எப்பொழுது அமையும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?


என் மகன் கேட்டரிங் படிப்பு படித்துவிட்டு சிறிய சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். எப்பொழுது அவருக்கு திருமணம் நடக்கும்? நல்ல வேலை எப்பொழுது அமையும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?

 -ஆர். கண்ணன்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னாதிபதி, ஆறாமதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுகாதிபதி சூரிய பகவான், பூர்வ புண்ணியாதிபதி புத பகவான், தைரியாதிபதி சந்திர பகவான் ஆகியோருடன் இணைந்திருக்கிறார். இரண்டு கேந்திராதிபதிகள், ஒரு திரிகோணாதிபதி ஆகியோரின் இணைவு களத்திர ஸ்தானத்தில் ஏற்படுவது சிறப்பு. இவர்களை லக்னத்திலிருந்து செவ்வாய் பகவான் பார்வை செய்வது களத்திர ஸ்தானத்திற்கு வலுவூட்டுவதாக அமைகிறது. 

அஷ்டமாதிபதி, லாபாதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஏழாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய, சுக்கிர, சந்திர, புத பகவான்களின் மீதும், ஏழாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும் படிகிறது.

சிவராஜயோகம், புத ஆதித்ய யோகம், குருச் சந்திர யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் சுக்கிர மஹா தசையும் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். 2022 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் சூரிய மஹா தசையிலிருந்து படிப்படியாக நிரந்தரமான வருமானம் வரும் வேலை கிடைத்துவிடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com