எனது மகள் மருத்துவராக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். இப்போது அவருக்கு திருமணம் செய்யலாமா...

எனது மகள் மருத்துவராக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். இப்போது அவருக்கு திருமணம் செய்யலாமா...

எனது மகள் மருத்துவராக இருக்கிறார். மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். இப்போது அவருக்கு திருமணம் செய்யலாமா... வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உண்டா... வாழ்க்கை நலம் பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 

-வாசகர், கோவை. 

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதி (பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானாதிபதி) சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றமர்ந்து பாக்கியாதிபதியான 
புத பகவானுடன் இணைந்திருக்கிறார். இதை மஹா விஷ்ணு, மஹாலட்சுமி யோகம் என்பார்கள். 
சுகப் பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில், சுய சாரத்தில் அமர்ந்து கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் மூன்றாம் வீட்டில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார். 
குரு பகவான் ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சந்திர (கஜகேசரி யோகம்) பகவானையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டையும் பார்வை செய்கிறார். 
தொழில் ஸ்தானாதிபதியை முழுச் சுபரான குரு பகவான் பார்வை செய்வது உன்னதம். தற்சமயம் சனி பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. இன்னும் மூன்றாண்டுகள் சிறப்பான காலமாக அமைவதால் திருமணம் கைகூட வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உள்ளது. மணவாழ்க்கை, எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com