வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு திருமணமாகி, ஆண் குழந்தை பிறந்தபின் விவாகரத்தாகி விட்டது. மறுமணம் எப்பொழுது நடக்கும்...பெண் உறவிலா அல்லது அந்நியத்திலா... மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்குமா... மறுமண வாழ்க்கையில் முதல் தாரத்து மகனால் பிரச்னை ஏற்படுமா...  -முத்துலட்சுமி, சென்னை.

எந்தப் பிரச்னையும் ஏற்படாது
 வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு திருமணமாகி, ஆண் குழந்தை பிறந்தபின் விவாகரத்தாகி விட்டது. மறுமணம் எப்பொழுது நடக்கும்...பெண் உறவிலா அல்லது அந்நியத்திலா... மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்குமா... மறுமண வாழ்க்கையில் முதல் தாரத்து மகனால் பிரச்னை ஏற்படுமா...
 -முத்துலட்சுமி, சென்னை.
 உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி புத பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவான், லாபாதிபதியான மூலத்திரிகோணம் பெற்ற செவ்வாய் பகவானுடன் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சுக்கிர (மஹா விஷ்ணு மஹாலட்சுமி யோகம்) பகவான் ஆகியோருடன் இணைந்து இருக்கிறார்.
 லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைந்திருப்பது சிறப்பு. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சனி பகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பு.
 குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது.
 தற்சமயம் ஏழரை நாட்டுச் சனியின் இரண்டாம் சுற்றில் (பொங்கு சனி) இறுதிப்பகுதி நடக்கிறது. ராகு மஹா தசை முடிவடைந்து குரு மஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சமதோஷமுள்ள மணப்பெண் உங்கள் இனத்திலிருந்தே அமைந்து திருமணம் கைகூடும்.
 மண வாழ்க்கை சீராக அமையும். புத்திர பாக்கியம் உண்டு. முதல் தாரத்து மகனாலோ, குடும்பத்தினராலோ எந்தப் பிரச்னையும் உண்டாகாது. பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com