நான் சிறுசேமிப்பு பணியில் இருக்கிறேன். ஓய்வுக்குப்பின் வருமானம் வரும் வாய்ப்பு உள்ளதா... ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது..?
By DIN | Published On : 21st May 2021 04:23 PM | Last Updated : 21st May 2021 04:23 PM | அ+அ அ- |

தீர்க்காயுள் யோகம்!
நான் சிறுசேமிப்பு பணியில் இருக்கிறேன். ஓய்வுக்குப்பின் வருமானம் வரும் வாய்ப்பு உள்ளதா... ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது..?
சங்கரவேல், தென்காசி.
உங்களுக்கு கடக லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னாதிபதி, சுக ஸ்தானத்தில் திக் பலம் பெற்று புத பகவானுடன் கூடி தொழில் ஸ்தானத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் குரு (கஜகேசரி யோகம்) பகவானையும், சனி பகவானையும் பார்வை செய்கிறார்கள்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியின் மீதும் படிகிறது. தனாதிபதி செவ்வாய் பகவான், பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி யோக காரகரான செவ்வாய் பகவானுடனும், ராகு பகவானுடனும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இணைந்திருக்கிறார்.
தற்சமயம் குரு பகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் தசையில் தனாதிபதியான சூரியபுக்தி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும். படிப்படியாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி காணப்படும்.
சனி பகவான் துலாம் ராசிக்கு யோக காரகராகத் தொடர்ந்து நல்ல இடங்களில் சஞ்சரிப்பது சிறப்பு. ஆயுள் காரகர், ஆயுள் ஸ்தானாதிபதி சனி பகவான் கர்ம ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகத்தைப் பெறுவதால் தீர்க்காயுள் உண்டு. தொடர்ந்து வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.