திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத என் மகளுக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத என் மகளுக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத என் மகளுக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுது உண்டாகும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

-வாசகி, புதுக்கோட்டை.

உங்கள் மகளுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுக லாபாதிபதியான நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றிருக்கும் செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். 
பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோணம் பெற்று, சூரிய, ராகு பகவான்களுடன் இணைந்திருப்பதும், அவர்களை சனி, கேது பகவான்கள் பார்வை செய்வதும் சிறு குறை என்றே கூற வேண்டும். 
தற்சமயம், அயன ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றிருக்கும் குரு மஹா தசை நடக்கிறது.  குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. 
கோசாரத்திலும் அனுகூலமான சஞ்சரிப்புகள் நிகழ்வதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com