என் மகன் பொறியியல் படிப்பு படித்துவிட்டு குடிமைப்பணிகளுக்கு பயிற்சி பெற்றார். அவருக்கு 24 வயதாகும் போது திடீரென்று தந்தையை இழந்தார்.

என் மகன் பொறியியல் படிப்பு படித்துவிட்டு குடிமைப்பணிகளுக்கு பயிற்சி பெற்றார். அவருக்கு 24 வயதாகும் போது திடீரென்று தந்தையை இழந்தார்.

என் மகன் பொறியியல் படிப்பு படித்துவிட்டு குடிமைப்பணிகளுக்கு பயிற்சி பெற்றார். அவருக்கு 24 வயதாகும் போது திடீரென்று தந்தையை இழந்தார். இரண்டு வருடங்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் குடிமைப்பணி வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றி கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

வாசகி, சென்னை.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, விசாகம் நட்சத்திரம். பாக்கியாதிபதியான, ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் லக்னத்தில் நீச்சம் பெற்று நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 
சந்திர பகவான் தனு (உடல்) காரகர், மனோ காரகர், மாத்ரு (அன்னை) காரகர். சந்திர பகவானை "தினக்கோள்' என்பார்கள். அதனால் அவருக்கு பகை வீடு என்பது கிடையாது. 
சூரிய, புத பகவான்கள் நட்பு கிரகங்களாவார்கள். குரு, சுக்கிர, சனி, செவ்வாய் பகவான்கள் சமம் என்கிற நிலையில் உள்ளார்கள். 
சர்ப்ப கிரகங்களான ராகு / கேது பகவான்கள் பகை கிரகங்களாவார்கள். 
லக்னம், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்குமதிபதியான செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்), வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
அதோடு திக் பலத்திலும் இருக்கிறார். லக்னாதிபதி வலுத்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்தும், மதிப்பும் கூடும். செவ்வாய் பகவான் தன் நான்காம் பார்வையாக லக்னமான தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்கிறார். 
அதோடு, சந்திர (சந்திர மங்கள யோகம்), குரு (குரு மங்கள யோகம்) பகவான்களையும் பார்வை செய்கிறார். மனோ காரகனான சந்திர பகவானை லக்னாதிபதி பார்ப்பதால் மன நிம்மதி நிரம்பக் கிடைக்கும் என்று கூறமுடிகிறது. 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் லக்னத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 
குரு பகவான் (இரண்டாம் திரிகோணாதிபதி), சந்திர பகவான் (மூன்றாம் திரிகோணாதிபதி) மற்றும் இரண்டு தன ஸ்தானாதிபதிகள் (2, 9) இணைந்து குரு சந்திர யோகத்தைப் பெறுவது மிகவும் சிறப்பாகும். ஜாதகத்திற்கு சிறப்பான வலுவூட்டுகிறார்கள். 
பொதுவாக குரு சந்திர யோகத்தால் அழகிய தோற்றம், அறிவாற்றல் அதிலும் சுக்ல பட்சத்து (வளர்பிறை) சந்திர பகவானால் வாழ்க்கையில் வெற்றி, செய்யும் தொழிலில் சிறப்பு ஆகியவைகள் சுலபமாகக் கிட்டும். அதோடு சந்திர மங்கள யோகத்தால் தன்னம்பிக்கை, சாதனைகள் செய்யும் வலிமை ஆகியவைகளும் உண்டாகும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தன் ஆட்சி வீடான மீன ராசியின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், ஏழாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜ யோகம்), புத, சுக்கிர பகவான்களின் மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்குமதிபதியான சனி பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
சனி பகவான் நன்றாக உழைத்து பொருளீட்டச் செய்வார். சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபட வைத்து பெயர், புகழ் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். அதோடு செய்யும் தொழிலிலும் அதீத ஈடுபாடு ஏற்படும். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
இதனால் அனைத்து சங்கடமான சூழ்நிலைகளிலும் இனிமையாகப் பேசி சமாளிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். பொருளாதார நிலையில் வளர்ச்சி, மன நிறைவு ஆகியவை உண்டாகும். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். 
ஏழாம் வீடு, எட்டாம் வீட்டுக்கு அதிபதிகள் இணைந்திருப்பது சிறு குறை என்றாலும், அவர்கள் நவாம்சத்தில் அதி பலம் பெற்றிருப்பது குறையைக் குறைக்கும் அம்சமாகும். 
தொழில் ஸ்தானாதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். 
கேதுபகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
ராகு பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். அரசு கிரகங்கள் வலுவாக இருந்தாலும், குடிமைப்பணியைப் பெறுமளவிற்கு பலமாக இல்லாததால் தனியார் துறையில் சிறப்பாக முன்னேறுவார். வெளிநாடு சென்று தங்கி, பொருளீட்டும் யோகமும் உள்ளது. மற்றபடி எதிர்காலம் வளமாக அமையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com