
12 ராசிக்காரர்களுக்கும் அவரவர் ராசி, கிரக நிலைக்கேற்ப பரிகாரங்களும், அவை எந்த விஷயத்திற்காகச் செய்தால் நல்லது என்பதையும் மிக எளிமையான முறையில் கூறப்பட்டுள்ளது. முடிந்தவரை அதனைப் பின்பற்றினால் நிச்சயம் 2026 மிக சிறப்பான ஆண்டாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏழரை சனி நடப்பதால் பயப்படத் தேவையில்லை. எளிய பக்தி மார்க்கம் உங்களைக் காக்கும். கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யலாம்.
ஏழரை சனிக்கான பரிகாரம் (மிக முக்கியம்): சனிக்கிழமைதோறும் சிவன் கோயில் அல்லது ஆஞ்சனேயர் கோயிலுக்குச் சென்று எள் தீபம் (நல்லெண்ணெய்) ஏற்றவும். தினமும் அல்லது சனிக்கிழமைகளில் அனுமன் சாலீசா அல்லது சனி கவசம் பாராயணம் செய்யவும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் (உணவு, ஆடை) கொடுக்கலாம். சனி பகவான் "ஈகை" குணத்திற்கு அடிமை. திருநள்ளாறு அல்லது குச்சனூர் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது சிறப்பு.
செவ்வாய் மற்றும் ராகு-கேது பரிகாரம்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம் பெற, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் கேட்பது மனதை அமைதிப்படுத்தும். துர்க்கை அம்மன் வழிபாடு ராகு-கேது தோஷங்களைக் குறைக்கும். ஞாயிறு, ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது நல்லது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை மறக்காதீர்கள். இதுவே உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசம்.
இந்த ஆண்டு கிரகங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளன. இருக்கும் சிறு தடைகளையும் நீக்கி, ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கக் கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள் செய்யுங்கள்.
ராகு பகவானுக்கு (தொழில் வெற்றிக்கு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடவும். எலுமிச்சை விளக்கு ஏற்றுவது சிறப்பு. தொழிலில் நேர்மையாக இருங்கள். குறுக்கு வழியில் சென்றால் ராகு தண்டிப்பார், நேர்மையாக இருந்தால் அள்ளித் தருவார்.
கேது பகவானுக்கு (குடும்ப அமைதிக்கு): விநாயகப் பெருமானைத் தினமும் வழிபடவும். சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வழிபடுவது மனக் கவலையைப் போக்கும். வீட்டைச் சுத்தமாகவும், மங்களகரமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
சனி பகவானுக்கு (தொழிலில் லாபத்தைப் பெருக்க): சனிக்கிழமைகளில் ஏழைகள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இது சனியின் அருள் பரிபூரணமாகப் பெற்றுத்தரும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது மற்றும் வரியைக் கட்டுவதில் நேர்மையாக இருங்கள்.
ராசிநாதன் சுக்கிரனுக்கு (பொதுவான நன்மைக்கு): வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் ஏற்றி வழிபடவும். சுமங்கலிப் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். ஸ்ரீரங்கம் அல்லது உங்கள் ஊரில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
இந்த ஆண்டு 10-ல் உள்ள சனியின் தாக்கத்தை சமாளிக்கவும், குருவின் அருளை முழுமையாகப் பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
சனி பகவானுக்கு (வேலைப்பளு குறைய): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது சிறப்பு. சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். துப்புரவுத் தொழிலாளர்கள் அல்லது கடின உழைப்பாளிகளுக்கு உதவுங்கள். இது சனியை மகிழ்ச்சிப்படுத்தும்.
ராகு-கேது தோஷத்திற்கு: முயற்சியில் தடை வராமல் இருக்க விநாயகப் பெருமானை தினமும் வணங்கலாம். நெற்றியில் குட்டு வைத்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். 9-ல் ராகு இருப்பதால், உங்கள் தந்தை மற்றும் முன்னோர்களின் ஆசியைப் பெறுங்கள்.
குரு மற்றும் புதனுக்கு: உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது மனதிற்கு தெளிவைத் தரும். வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.
எளிய பரிகாரம்: பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிப்பது மிதுன ராசிக்கு எப்போதும் நன்மையைத் தரும்.
அஷ்டம ராகுவின் தாக்கத்தைக் குறைக்கவும், ஹம்ச யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கவும் கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்யுங்கள்.
அஷ்டம ராகுவிற்கு (மிக முக்கியம்): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடவும். எலுமிச்சை விளக்கு ஏற்றுவது சிறப்பு. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். குலதெய்வமே, அஷ்டம ராகுவின் பிடியிலிருந்து உங்களைக் காக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.
குரு பகவானுக்கு ஹம்ச யோகம் பலம் பெற: (குரு தனது சொந்த ராசியில் (தனுசு, மீனம்) அல்லது உச்சம் பெறும் இடத்தில் (கடகம்) 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமையும்போது ஹம்ச யோகம் ஏற்படுகிறது)
வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்குக் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும். பெரியவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குருமார்களை மதித்து நடக்கவும்.
கேது பகவானுக்கு (குடும்ப அமைதிக்கு): பேச்சில் நிதானம் வர விநாயகப் பெருமானை வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
சனி பகவானுக்கு: 9-ல் (பாக்கிய ஸ்தானம் ) சனி இருப்பதால், சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைக்கலாம். முதியோர் இல்லங்களுக்கு உதவுவது புண்ணியத்தைத் தரும் பாக்கியங்கள் தடையில்லாமல் கிடைக்கப்பெறும்.
அஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைக்கும், ராகு-கேது தோஷத்தை நீக்கும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
சூரிய பகவானுக்கு (ராசி அதிபதி): தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் கேட்பது அல்லது சொல்வது மன தைரியத்தைத் தரும். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்வது சிறப்பு.
அஷ்டம சனிக்கு - ராசிக்கு 8 -ல் சனி (மிக முக்கியம்): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது பயத்தைப் போக்கும். "ஓம் நமசிவாய" என்று தினமும் 108 முறை ஜபிக்கவும். மகா மிருத்தியுஞ்சய மந்திரம் ஆரோக்கியத்தைக் காக்கும். மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியவர்களுக்கு உதவுங்கள். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.
ராகு-கேது தோஷத்திற்கு: மனக் குழப்பம் நீங்க விநாயகரை வணங்கலாம். அருகம்புல் மாலை சாற்றுவது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடவும். குடும்ப உறவு சிறக்க, விட்டுக்கொடுத்துப்போவது தான் சிறந்த பரிகாரம்.
செவ்வாய்க்கு (செப் முதல்-நவம்பர் வரை): முருகப்பெருமானை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு தானம் செய்யலாம்.
கண்டக சனியின் தாக்கத்தைக் குறைக்கும், ராகு-குருவின் பலனை முழுமையாகப் பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யுங்கள்.
கண்டக சனிக்கு (ராசிக்கு 7-ல் சனி): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது சிறப்பு. கணவன்-மனைவி ஒற்றுமைக்கு, திங்கள்கிழமைதோறும் சிவன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.
சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வது சனியின் கோபத்தைத் தணிக்கும்.
ராகு பகவானுக்கு (வெற்றிக்கு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடவும். "ஓம் துர்காய நமஹ" என்று தினமும் சொல்லவும்.
கேது பகவானுக்கு (மன அமைதிக்கு): விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் தொடங்குங்கள். அருகம்புல் மாலை சாற்றுவது நல்லது.
ராசிநாதன் புதனுக்கு: புதன்கிழமைகளில் பெருமாளை (விஷ்ணு) துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்யவும். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது புத்தியைத் தெளிவாக்கும்.
5-ல் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) உள்ள ராகுவின் தோஷத்தை நீக்கவும், ஹம்ச யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
ராகு பகவானுக்கு (மனக் குழப்பம் நீங்க): சரஸ்வதி தேவியை புதன்கிழமைதோறும் வழிபடவும். இது படிப்பில் கவனத்தை அதிகரிக்கும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும்.
குழந்தைகளுக்கு இனிப்பு அல்லது நோட்டுப் புத்தகங்கள் தானம் செய்வது ராகுவின் கோபத்தைத் தணிக்கும்.
கேது பகவானுக்கு: எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபடவும். அருகம்புல் மாலை சாற்றுவது சிறப்பு.
சனி பகவானுக்கு (தொழிலில் வெற்றி பெற): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது தைரியத்தைத் தரும். உழைப்பாளிகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள். இது சனியை மகிழ்ச்சிப்படுத்தும்.
ராசிநாதன் சுக்கிரனுக்கு: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் ஏற்றி வழிபடவும். வெள்ளைப் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.
கிரகங்களின் தாக்கத்தைச் சமாளிக்கும், நற்பலன்களை அதிகரிக்கக் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
அஷ்டம குரு பரிகாரம் (மே வரை): வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லவும். குருவுக்குக் கொண்டைக்கடலை மாலை சாத்துவது நல்லது. பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் கொடுக்கவும். பெரியவர்கள் மற்றும் குருமார்களை மதித்து நடக்கவும்.
பஞ்சம சனி (ராசிக்கு 5ல் சனி) பரிகாரம் (ஆண்டு முழுவதும்): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது மன பயத்தைப் போக்கும். சனிக்கிழமைதோறும் எள் தீபம் ஏற்றவும். ஊனமுற்றோர் அல்லது முதியவர்களுக்கு உதவுவது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.
ராகு-கேது பரிகாரம்: மன அமைதிக்கு, துர்க்கை அம்மனை வழிபடவும். ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். தொழில் தடை நீங்க விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கலாம். தினமும் சிறிது நேரம் தியானம் செய்வது ராகுவினால் ஏற்படும் மனக் குழப்பத்தைத் தீர்க்கும்.
அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைக்க நல்ல பலனைப் பெற கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யுங்கள்.
அர்த்தாஷ்டம சனிக்கு (ராசிக்கு 4-ல் சனி): தினமும் மாலை வேளையில் ஹனுமன் சாலிசா சொல்வது, கேட்பது மன பயத்தைப் போக்கும்.
சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர் அல்லது முதியோர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். தாயாரை மதித்து நடப்பது, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது சனியின் கோபத்தைத் தணிக்கும்.
ராகு பகவானுக்கு (எதிலும் வெற்றிக்கு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும். எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். உழைப்பாளிகளுக்கு உதவுங்கள்.
கேது பகவானுக்கு (ஞானத்திற்கு): விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் தொடங்குங்கள்.
ராகு-கேது தோஷத்தை நீக்கும், ஹம்ச யோகத்தின் பலனை முழுமையாகப் பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யுங்கள்.
ராகு பகவானுக்கு (குடும்ப அமைதிக்கு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும். ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது சிறந்த பரிகாரம்.
கேது பகவானுக்கு (ஆரோக்கியத்திற்கு): விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் தொடங்குங்கள். "ஓம் கம் கணபதயே நமஹ" என்று தினமும் சொல்லவும்.
சனி பகவானுக்கு (வெற்றிக்கு): சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரை வழிபடவும். ஹனுமன் சாலிசா சொல்வது தைரியத்தைத் தரும். உழைப்பாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.
குரு பகவானுக்கு (திருமண யோகத்திற்கு): வியாழக்கிழமையில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்துவது, பெரியோரை மதித்து நடத்துவது, முதியோர் இல்லங்களுக்கு தேவையானவற்றை அளிப்பது.
ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும், ஜென்ம ராகு தோஷத்தை நீக்கும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
ஏழரை சனிக்கு ( ராசிக்கு 2-ல் சனி): தினமும் மாலை வேளையில் ஹனுமன் சாலிசா சொல்வது அல்லது கேட்பது மன பயத்தைப் போக்கும். "ஓம் சம் சனீஸ்வராய நமஹ" என்று தினமும் 108 முறை ஜபிக்கவும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது கருப்பு எள் தானம் செய்வது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.
ஜென்ம ராகுவிற்கு (ராசியில் ராகு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும். ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். மிருத்யுஞ்சய மந்திரம் சொல்வது உடல் மற்றும் மனதிற்கு பாதுகாப்பு தரும். தீய பழக்கங்களை தவிர்ப்பது ராகுவிற்கு சிறந்த பரிகாரம்.
கேது பகவானுக்கு (குடும்ப அமைதிக்கு): விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் தொடங்குங்கள். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக்கொடுத்துப்போவது கேதுவின் தாக்கத்தைக் குறைக்கும்.
குரு பகவானுக்கு: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்துவது, பெரியோரை மதித்து நடத்துவது, முதியோர் இல்லங்களுக்கு தேவையானவற்றை அளிப்பது.
ஜென்ம சனியின் தாக்கத்தை குறைக்கும், 12-ல் உள்ள ராகுவின் தோஷத்தை நீக்கும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்யுங்கள்.
ஜென்ம சனிக்கு ( ராசியில் சனி): தினமும் மாலை வேளையில் ஹனுமன் சாலிசா சொல்வது அல்லது கேட்பது மன பயத்தைப் போக்கும். "ஓம் ருத்ராய நமஹ" என்று சொல்லி சிவபெருமானை வழிபடவும். மிருத்யுஞ்சய மந்திரம் ஆரோக்கியத்தைக் காக்கும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது கருப்பு எள் தானம் செய்வது சனியின் அருளைப் பெற்றுத் தரும்.
ராகு பகவானுக்கு (ராசிக்கு 12-ல் ராகு): செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும். இரவில் நிம்மதியாகத் தூங்க, படுக்கும் முன் "ஓம் நம சிவாய" சொல்லவும்.
குரு பகவானுக்கு (பாதுகாப்பிற்கு): வியாழக்கிழமையில் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றவும். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது நல்லது.பெரியவர்கள் மற்றும் குருமார்களை மதித்து நடக்கவும்.
இதில் கூறப்பட்டவை ராசியை முன்னிறுத்தி கிரகங்களின் கோச்சார (நிலை மாற்றம்) நிலையை பொறுத்தும் மட்டுமே கூறப்பட்டுள்ளன. தனி நபர் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு ஏற்ப மற்றும் நடப்பு தசை / புத்திகளுக்கு ஏற்ப, நிச்சயம் சிறிதளவு மாற்றம் இருக்கவே செய்யும்.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."
தொடர்புக்கு: 98407 17857, 91502 75369
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.