மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024

சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களுக்கு குருப்பெயர்ச்சி எந்தமாதிரியான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2024
Published on
Updated on
2 min read

மகர ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே நீங்கள் வாதாடுவதில் வல்லவர்கள்.

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது பாக்கிய ஸ்தானம் - லாப ஸ்தானம் - ராசி ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்த பெயர்ச்சியில் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும்.

பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

 உத்திராடம் 2, 3, 4 பாதம்

இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

திருவோணம்

இந்த பெயர்ச்சியில் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்

இந்த பெயர்ச்சியில் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். 

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஆஞ்சநேயாய நம என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com