ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: மேஷம்

மேஷ ராசிக்கு இந்தாண்டு எப்படி இருக்கும்?
மேஷ ராசி
மேஷ ராசி
Updated on
3 min read

கிரகநிலை

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்

கிரக மாற்றங்கள்

06.03.2026 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26.05.2026 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13.11.2026 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்

இந்த வருடம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

லாபம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் குறையும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கும் ஏற்கெனவே இருந்த தொழிலில் சிக்கல்கள் குறைவதற்கும் இந்த வருடம் மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணியிட மாற்றம் பதவி உயர்வு நிச்சயமாகக் கிடைக்கும் சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான உத்தியோகம் கிடைக்கும்.

குடும்பாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் குடும்பத்திலிருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களைப் பத்திரமாக வைத்திருப்பது நல்லது. மங்கல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். தனஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். ராசியில் சூரியன் உச்சமாக இருப்பதால் எதிர்பார்க்கக்கூடிய பதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியிலிருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். கல்வி ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் கல்வியிலிருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை உங்களால் புரிய முடியும்.

அஸ்வினி

இந்த வருடம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாகக் காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பரணி

இந்த வருடம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்திலிருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்களுக்காகச் செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் தேவை. தேர்வு எழுதும் போது கேள்விகளைக் கவனமாகப் படித்து எழுதுவது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்

இந்த வருடம் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாகக் காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பரிகாரம்: தினமும் விநாயகரை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் - செவ்வாய் - குரு

எண்கள்: 1 - 3 - 6 - 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com